மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதில் முக்கிய விஷயமாக புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்ற அதிரடியான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதன்படி, மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் நபர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை. இது மாத ஊதியதாரர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.