இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை அறிவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், 12ஆம் வகுப்பு வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி