கோவைக்கு புதிய திட்டங்கள் அறிவிப்பு

கோவையில், சின்னியம்பாளையம் - நீலாம்பூர் வரை மேலும் 5 கி.மீ நீளத்திற்கு ரூ. 600 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட மேம்பாலச் சாலை நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித-விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், பயிர்சேதங்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கவும் ரூ.7 கோடி மதிப்பில் 10 கி.மீ நீளத்திற்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி