மகளிர் உதவி தொகை ரூ.5000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, நகை கடன் தள்ளுபடி குறித்த தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகை கடன்கள் குறித்த விரிவான விவரங்களை சேகரிக்கும் பணியில் அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த தரவுகள் கோரப்பட்டுள்ளதால், கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.