அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் கோ.ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் ச.கார்த்திக் குமாரி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக அனைத்துப் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்