என்டிஏ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக தலைமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் ராஜினாமா செய்த நிலையில், வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.