தவெக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

கணவரை இழந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த X பதிவில், பெண்கள் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் CM விஜய்யின் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. சமூக விரோதச் செயல்களுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி