ரஜினியின் ஆதரவுடன் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை.. பரபரப்பு போஸ்டர்

ஜூன் 4-ல் தனது பிறந்தநாளன்று அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியமைத்துள்ள சூழலில், பாஜகவிலிருந்து வெளியேறி 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் அவர் கட்சி தொடங்க ஆதரவாளர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் இதற்கு ரஜினி ஆதரவளிப்பதாக கூறி ரஜினியின் 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இது தவெகவை எதிர்க்க பாஜகவின் 'பி டீம்' திட்டமாக இருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி