பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது ஆதரவு பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் முனுசாமி, பாஜகவில் இருந்து விலகுவதாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை நேரில் சந்தித்து, கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.