பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகுவதாக 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை தேசியத் தலைவரிடம் வழங்கியுள்ளார். அதிமுக கூட்டணிக்குத் தலைமை இசைவு கொடுத்தது, தமக்குத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது போன்ற அதிருப்திகளால் இந்நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள சூழலில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.