தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலை செருப்பை அணிந்து கொண்டார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை செருப்பு அணிவதில்லை என அண்ணாமலை சபதம் ஏற்றிருந்தார். இந்நிலையில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை அவர்களுக்கு அன்பான வேண்டுகோள், காலில் செருப்பு அணிந்து கொள்ளுங்கள். 2026-ல் நமது ஆட்சி தான் என்று வேண்டுகோள் வைத்தார். இதைத்தொடர்ந்து, அண்ணாமலை காலணி அணிந்து கொண்டார்.
நன்றி: தந்தி