பாஜகவிலிருந்து விலகி, வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின் புதிய கட்சி தொடங்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைக்கு அவர் கட்சி தொடங்க மாட்டார் என அவரது தரப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷை இன்று (ஜூன் 2) சந்தித்து பேசியுள்ளார். மேலும், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ள போதிலும், இதுவரை அவருக்கு அனுமதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
நன்றி:News18