"அண்ணாமலைக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது" - சேகர்பாபு விமர்சனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “அவர் எப்போது அந்த சாட்டையால் அடித்துக் கொண்டாரோ அன்றைய தினமே அவர் அரசியல் ஞான சூனியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. பெரியாரை யாரெல்லாம் இழிவு படுத்துகிறார்களோ அவர்களெல்லாம் தமிழக அரசியலில் எடுபட மாட்டார்கள். தமிழகத்தின் விடிவெள்ளியாக பகுத்தறிவு வெளிச்சத்தை உண்டாக்கி தந்தவர் பெரியார்” என்றார்.

தொடர்புடைய செய்தி