முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் இன்று (ஏப்.12) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றார். இதையடுத்து, உரையாற்றிய தேர்தல் பொறுப்பாளர் கிஷண் ரெட்டி, அண்ணாமலைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.