பாஜகவின் புதிய தலைவர் - 5 முனை போட்டி

தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வருகை தர உள்ளார். புதிய தலைவர் பதவிக்கு எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் என 5 முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கிஷன் ரெட்டி ஏப். 7, 8-ல் சென்னையில் முகாமிட்டு ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றபின் பாஜக தலைவரை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி