செய்யாறு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணாமலை கண்டனம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இது காட்டுவதாகவும், போதை பொருள் புழக்கம் மற்றும் காவல்துறை மீதான பயமின்மையால் தமிழகம் இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி