அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஆதாரங்களை மறைத்ததாக எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நாளை (நவ.04) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. குற்றவாளி ஞானசேகரன் செல்போனில் யாருடன் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக அண்ணாமலை கூறியது குறித்து விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.