பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'திமுக பைல்ஸ்' என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு வெளியிட்டார். இதில், திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்த்து டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக இன்று (பிப்.16) இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நன்றி: தந்தி