அண்ணா தொழிற்சங்கத்தினர் நாதகவில் இணைந்தனர்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு மாற்றுக் கட்சியினர் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி தொகுதி அஞ்சு கிராமம் சந்திப்பில் இயங்கி வந்த 40 ஆட்டோ ஓட்டுநர்கள் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்து விலகி நாம் தமிழர் தொழிற்சங்கத்தில் இணைந்துள்ளனர். நேற்று முன்தினம்  (பிப்., 04) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர்கள் வரும் தேர்தலில் நாதகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி