நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தாய்மாமன் சீர் கொண்டு வந்துள்ளார். மேளதாள வாத்தியங்கள் முழங்க வந்த அவரை, சீமான் தனது வீட்டின் வெளியே வந்து நேரில் வரவேற்று அன்போடு அழைத்துச் சென்றார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.