திமுகவில் முக்கிய பதவிக்கு காய் நகர்த்தும் அனிதா ராதாகிருஷ்ணன்

திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. செயற்குழு கூட்ட தீர்மானங்களின்படி, மாவட்டங்களின் எண்ணிக்கை 78லிருந்து 110ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பதவிகளை இழக்கின்றனர். கேகேஎஸ்எஸ்ஆர், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சீனியர்கள் மாற்றுப் பதவிகளைப் பெற முயன்று வருகின்றனர். குறிப்பாக, அனிதா ராதாகிருஷ்ணன் துணைப் பொதுச்செயலாளர் பதவியை அடைய காய்களை நகர்த்துவதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி