பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது 35-வது பிறந்தநாளை இன்று (அக்.16) கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.