கஜகஸ்தானின் பைகோனுார் ஏவுதளத்திலிருந்து ரஷ்யாவின் 'சோயுஸ் எம்எஸ்-29' விண்கலம் மூலம் இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் (49) வெற்றிகரமாக விண்வெளி பயணத்தை தொடங்கினார். ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் இணைந்து அவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சுமார் 8 மாதங்கள் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு விண்வெளி பணிகளை முடித்த பின்னர் அவர் பூமிக்குத் திரும்புகிறார்.