'நான் மற்றவர்களைப் போல அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் நான் தரமாட்டேன், அதையெல்லாம் நீங்களே வாங்கிக்கொள்ளும்படி வேலையை தருகிறேன்' என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் இன்று (மார்ச் 27) பரப்புரையில் பேசிய அவர், 'ஒருமுறை ஆட்சியை என்னிடம் தாருங்கள். நல்ல கல்வி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவம், தூய குடிநீரை இலவசமாக தருகிறேன். யார் கையையும் எதிர்பார்க்காமல் தன்மானத்தோடு வாழக்கூடிய தற்சார்பு வாழ்க்கையை உங்கள் பிள்ளையாகிய நான் தருவேன்' என்றார்.