தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பிலிருந்து முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாமக சட்ட விதிகளின்படி, மே 29ஆம் தேதி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 5ஆம் தேதி நடந்த பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அன்புமணியை நிர்வாகக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியிருந்தார்.