விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "அமைதிப்பேச்சுவார்த்தையில் நல்ல பதில் வரவில்லை. அன்புமணி ஜி.கே. மணியை சந்திக்கச் சொன்னேன். அன்புமணி சந்திக்கவில்லை. பாஜக உட்பட எந்த கட்சி பின்புலமும் பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு காரணம் இல்லை. அன்புமணி யார் பேச்சையும் கேட்கமாட்டார். முயலுக்கு எத்தனை கால் என கேட்டால் அனைவரும் 4 என கூறுவார்கள். ஆனால், அன்புமணி 3 கால்கள் தான் என கூறுவார். அதனையே பிறரையும் கூறச்சொல்லுவார்" என பேசினார்.