மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியைத் தருவதாகத் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். குழந்தை என்றும் பாராமல் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபடும் மனித மிருகங்களை மன்னிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.