பாமகவில் நிலவும் பிரச்சனை குறித்து தைலாபுரத்தில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "2026 தேர்தல் முடிவும் வரை பாமக தலைவர் நானே. 2026 தேர்தலுக்கு பின்னர் அன்புமணி எடுத்து செல்லட்டும். என்னை தலைவராக ஏற்றுக்கொள்வது மட்டுமே அன்புமணிக்கு ஒரே தீர்வு ஆகும். பாமகவை நிறுவிய நான் தலைவராக செயல்படக்கூடாதா? முன்பெல்லாம் அன்புமணியை யாராலும் எளிதில் பார்க்க முடியாது. இன்று ஒவ்வொரு நிர்வாகிகளையும் கூவிக்கூவி அழைக்கிறார்" என பேசினார்.