சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்களது கூட்டணிகளைப் பலப்படுத்தி வருகின்றன. ஆனால், பாமக இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால், கூட்டணி முடிவு இதுவரை எட்டப்படவில்லை. ராமதாஸ் தரப்பு அணி, திமுக உடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும், அன்புமணி தரப்பு தவெக உடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் இன்று (நவ.12) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அன்புமணி தரப்பு இதுகுறித்து பேசியதாக கூறப்படுகிறது.