திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (நவ.2) நடந்த கனிமவளக் கொள்ளை கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பி.யு.சி.எல் எனப்படும் மக்கள் சிவில் உரிமைகள் ஒன்றியத்தின் தேசிய பொதுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வி.சுரேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், “கனிமக் கொள்ளை சாம்ராஜ்யத்தை பாதுகாத்துக் கொள்ள முயலும் காட்பாதர்களின் அட்டகாசம் கண்டிக்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.