தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாத அரசுக்கு அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் திமுக அரசு 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. உயர்நிலைப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் அவசியம். பணியிடங்களை நிரப்ப திமுக அரசுக்கு வாய்ப்பு இருந்தும் செய்யவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி