தனியார் பள்ளிகளிடம் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய மனு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் ஏற்கனவே முத்துக்குமார் சிறையில் உள்ள நிலையில், நேற்று சரவணன் என்பவரும் சரணடைந்தார்.