தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி மோசடி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த அக்., 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 3 நாள் போலீஸ் காவல் முடிந்து, நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் துன்புறுத்தப்படவில்லை என்று கூறினார். இதையடுத்து, நவ., 6ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.