வெள்ளத்தில் சேற்றில் சிக்கி தலையை மட்டும் வெளியே நீட்டி போராடிய மூதாட்டி

நேபாள வெள்ளப்பெருக்கில் தலையை மட்டும் வெளியே நீட்டியவாறு 8 முதல் 9 மணி நேரம் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய 97 வயது மூதாட்டி, அவரது தலை அசைவைக் கண்ட மீட்புப் படையினரால் உயிருடன் மீட்கப்பட்டார். ஆம்புலன்ஸ் வர முடியாத சூழலால், அவர் பொக்லைன் பக்கெட்டில் பாதுகாப்பாக ஏற்றி வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளதாக அவரது பேரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕