தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக இதுவரை தனது கூட்டணியை அறிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. மேலும், அதிமுக மற்றும் NDA கூட்டணி நிர்வாகிகளுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், "கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை என கவலைப்பட வேண்டாம். சரியான நேரத்தில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும்" என தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.