பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற அமமுக வலியுறுத்தல்

சென்னை: "ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும்" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி இழப்பாலும் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும், அதனால் ஏழை, எளிய மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என அவர் தனது எக்ஸ் தள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி