சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாக மதுரை வந்துள்ளார். மதுரை வந்த அமித் ஷா-வுக்கு பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இந்நிலையில், தற்போது அமித் ஷா மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவரை மதுரை ஆதீனம் வரவேற்றுள்ளார். அமித் ஷாவின் வருகையால் கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றி: சன்நியூஸ்