அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவின் ராணுவ பலத்தை கட்டியெழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பல அணு ஆயுதங்களை புதுப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அணு ஆயுத பயன்பாடு குறித்து நீண்ட காலம் நீடிக்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் எனவும் இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல போர்களை தான் நிறுத்தியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், உலகிலேயே அமெரிக்கா தான் மிகவும் சக்திவாய்ந்த நாடு என டிரம்ப் தெரிவித்துள்ளார்.