1985-ம் ஆண்டு 'பிளைட் 847' விமான கடத்தலை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனானுக்கான நேரடி விமான சேவையை அமெரிக்கா ரத்து செய்திருந்தது. தற்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு, வெள்ளை மாளிகையில் லெபனான் அதிபர் ஜோசப் அவுனை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். லெபனான் பல இன்னல்களை சந்தித்துள்ளதாகவும், இனி அந்நாட்டிற்கு அமெரிக்கா முழு ஆதரவையும் மரியாதையையும் அளிக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.