மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள பாரி கிராமத்தில் கடந்த 11ஆம் தேதி அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது. 1.5 அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரப் பிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர். இந்த சிலை நேற்று காணவில்லை. மர்ம நபர்கள் அதை பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து, மாயமான சிலையையும், அதை திருடிச்சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.