தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "அம்பேத்கர் அனைத்து சமுதாயத்தினருக்கும் வழிகாட்டும் தலைவர். அவரை விட்டு யாரும் இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது. தமிழ் மண் மீது அக்கறை இல்லாதவர்கள், சமூக ஒற்றுமையை பேணாமல், பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்தி தேர்தலில் ஈடுபட்டுள்ளனர். அம்பேத்கர் உருவாக்கிய சமத்துவப் பாடங்களை அனைவர் மனதில் நிலைநாட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.