மாடுகள் படிக்கட்டில் எந்த விதமான உதவி இல்லாமலும் ஏறிவிடும் என்றாலும், மீண்டும் அவை கீழே இறங்க உதவியை எதிர்பார்க்கின்றன அல்லது பயம் கொள்கின்றன. ஏனெனில் மாடுகளின் உடல் அமைப்பு, சாய்வு அமைப்புகளில் கீழே இறங்கும்போது நிலைதடுமாற வைக்கும். ஆகையால், மாடுகள் மேலிருந்து கீழே இறங்கும்போது அச்ச உணர்வுடன் இருக்கும். ஒருசில மாடுகள் மிரண்டு கீழே வராது. அதன் கால் அமைப்புகளும் இதற்கு காரணம் ஆகும்.