தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரிவோருக்கு மாற்றுப்பணி வழங்கப்பபடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய், வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் அருகில் இருந்து, 500 மீட்டர் துாரம் வரை அமைந்துள்ள, 717 மது கடைகளை இரு வாரங்களுக்குள் மூடும்படி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, அந்த கடைகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்களுக்கு அருகில் உள்ள வேறு கடைகளில் பணி வழங்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி: குமுதம்