அனைவருக்கும் வீடு கட்டும் பிரதமரின் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2024-25 பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும். முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்றார்.