அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது, அக்கட்சியை பலவீனப்படுத்தும் எடப்பாடி பழனிசாமியின் வியூகமோ என்ற விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, திமுக அமைச்சர்களின் வலுவான தொகுதிகள் பாஜகவுக்கு தள்ளப்பட்டுள்ளதால் திமுகவின் வெற்றி எளிதாகியுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும், தேசிய தலைவர்களின் பிரச்சாரம் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் இந்த சவாலை முறியடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.