தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நவ.13ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி: நியூஸ் தமிழ்