திமுகவுடன் கூட்டணி முடிந்து விட்டது: மாணிக்கம் தாகூர்

திமுகவுடனான கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே, அது தற்போது முடிந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மதுரையில் பேசியுள்ளார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மேலிட பார்வையாளர் அறிவிக்கும் வரை மற்ற பேச்சுகளுக்கு அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார். மேலும், எம்ஜிஆர் மற்றும் திமுக பேசிய அதே மதச்சார்பற்ற கொள்கையையே விஜய்யும் பேசுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி