சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக இதுவரை தனது கூட்டணியை அறிவிக்கவில்லை. கடலூரில் நேற்று (ஜன.09) நடந்த மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேமுதிக - பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, "தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை, எத்தனை இடங்களில் பாஜக போட்டி என்பதும் இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார்.