கூட்டணி தொகுதிப் பங்கீடு.. டி.ஆர்.பாலு தலைமையில் குழு

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.பி.,க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, தேமுதிக, மமக உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து நாளை முதல் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி