அம்மா உணவகத்தில் இட்லி கிடைப்பதில்லை எனக் குற்றச்சாட்டு

தூத்துக்குடி கோவில்பட்டி நகராட்சி அருகே உள்ள அம்மா உணவகத்தில், ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் இட்லிகள் பொதுமக்களுக்கு கிடைக்காமல், சிற்றுண்டி நடத்துபவர்களுக்கு மொத்தமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பள்ளிக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஐந்து இட்லி கேட்டாலும் தர மறுக்கும் நிலை உள்ளது. இது குறித்து கேட்டபோது, அதிகாரிகள் தான் விற்பனை செய்ய சொன்னதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த அவல நிலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: டைம்ஸ் ஆப் கோவில்பட்டி

தொடர்புடைய செய்தி